விசைத்தறி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்


விசைத்தறி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்
x
தினத்தந்தி 17 May 2022 9:27 PM IST (Updated: 17 May 2022 9:27 PM IST)
t-max-icont-min-icon

அந்தியூரில் 2-வது நாளாக விசைத்தறி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்

நூல் விலை உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் 2 நாட்கள் வேலை நிறுத்தம் நடைபெறும் என ஜவுளி உற்பத்தியாளர்கள் அறிவித்தனர். அதன்படி இந்த வேலைநிறுத்த போராட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது. ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து அந்தியூரில் விசைத்தறி உரிமையாளர்கள் நேற்று முன்தினம் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து 2-வது நாளாக நேற்று அந்தியூரில் விசைத்தறி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்காரணமாக அந்தியூர், புதுப்பாளையம், தவுட்டுப்பாளையம், வெள்ளையம்பாளையம், பிரம்மதேசம், ஆலாம்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கவில்லை. 

Next Story