ஆட்டோ கவிழ்ந்து வாலிபர் பலி


ஆட்டோ கவிழ்ந்து வாலிபர் பலி
x
தினத்தந்தி 17 May 2022 9:33 PM IST (Updated: 17 May 2022 9:33 PM IST)
t-max-icont-min-icon

காவேரிப்பாக்கம் அருகே ஆட்டோ கவிழ்ந்து வாலிபர் பலியானார்.

காவேரிப்பாக்கம்

காவேரிப்பாக்கத்தை அடுத்த ஆயர்பாடி பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ் (வயது 26), ஓச்சேரி பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர் கடந்த 15-ந் தேதி இரவு பழுதாகி நின்ற நண்பரின் ஆட்டோவை எடுத்து வர தனது ஆட்டோவில் கரிவேடு நோக்கி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள சர்விஸ் ரோட்டில் சென்றுள்ளார். அவருடைய நண்பர்கள் அதே பகுதியைச் சேர்ந்த முத்து (22), அரி (21), சூர்யா என்கிற முகேஷ் (22) ஆகியோரும் உதவிக்கு சென்றுள்ளனர்.

அப்போது சாலையில் இருந்த கல்மீது ஏறி ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி உள்ளது. இதில் சூர்யா என்கிற முகேஷ் தலையில் காயம் ஏற்பட்டது. மேலும் 3 பேருக்கு லேசானகாயம் ஏற்பட்டது.  படுகாயமடைந்த சூர்யாவை வாலாஜா அரசு மருத்துவ மனையில் சேர்த்து, மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். இது தொடர்பாக அவரது தந்தை பாண்டுரங்கன்  அவளூர் போலிசில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story