வால்பாறையில் படகு இல்லம் பயன்பாட்டுக்கு வருமா? என சுற்றுலா பயணிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
வால்பாறையில் படகு இல்லம் பயன்பாட்டுக்கு வருமா என சுற்றுலா பயணிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
வால்பாறை
வால்பாறையில் படகு இல்லம் பயன்பாட்டுக்கு வருமா? என சுற்றுலா பயணிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
படகு இல்லம்
வால்பாறையில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கவும், பொதுமக்களின் பொழுதுபோக்கிற்காகவும் நகராட்சி சார்பில் நீரார் அணையில் படகு இல்லம் அமைக்கும் பணிகள் கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முடிவடைந்தது. படகு சவாரிக்காக படகுகள் வரவழைக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. படகு சவாரி செய்பவர்களுக்காக பாதுகாப்பு வளையங்கள், பாதுகாப்பு கவச உடைகள் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கிடையே பணி முடிந்து ஓராண்டை கடந்தும் படகு இல்லம் திறக்கப்படாமல் உள்ளது.
பயன்படுத்தப்படாமல் இருந்ததால் தேக்கி இருந்த தண்ணீர் அசுத்தமானது. தொடர்ந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. தற்போது கோடை காலம் என்பதால் வால்பாறைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அவர்கள் வருகையை அதிகரிக்கவும், சுற்றுலாவை மேம்படுத்தவும் படகு இல்லம் அமைக்கப்பட்டது. பயன்பாட்டுக்கு வராமல் உள்ளதால் புதிய படகுகள், பாதுகாப்பு உபகரணங்கள் வீணாகி வருகின்றன.
திறக்க வேண்டும்
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:- வால்பாறை நகராட்சியில் ரூ.3 கோடி செலவில் படகு இல்லம் அமைக்கப்பட்டது. பணிகள் முடிந்த உடன் கடந்த ஆண்டு திறந்து இருந்தால் சுற்றுலா பயணிகள் வருமானம் கிடைத்து இருக்கும். ஓராண்டுக்கும் மேல் திறக்கப்படாமல் உள்ளதால் மக்களின் வரி பணம் வீணாகி வருகிறது. மேலும் படகு இல்லம் குப்பைகள் கொட்டும் இடமாக மாறி வருகின்றது. தற்போது பள்ளிக்கூடங்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இதனால் வால்பாறையில் நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்க சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
இங்கு வரும் அவர்கள் பிற பொழுதுபோக்கு இல்லாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். இந்தநிலையை போக்கவும், சுற்றுலா பயணிகளை கவரவும் புதிய படகுகள் மூலம் சவாரியை தொடங்க பொதுப்பணித்துறை மற்றும் நகராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவாகள் கூறினர். படகு இல்லம் பயன்பாட்டுக்கு வருமா? என்று சுற்றுலா பயணிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
Related Tags :
Next Story