துமகூருவில் நெகிழ்ச்சி சம்பவம்: கன்றுக்குட்டிக்கு பாலூட்டிய வளர்ப்பு நாய்
தாய்மை உணர்வு என்பது மனிதர்களுக்கு மட்டுமின்றி 5 அறிவு படைத்த உயிரினங்களுக்கும் உண்டு. இதனை நிரூபிக்கும் வகையில் ஒரு சம்பவம் கர்நாடக மாநிலம் துமகூருவில் நடந்துள்ளது.
துமகூரு:
தாய்மை உணர்வு என்பது மனிதர்களுக்கு மட்டுமின்றி 5 அறிவு படைத்த உயிரினங்களுக்கும் உண்டு. இதனை நிரூபிக்கும் வகையில் ஒரு சம்பவம் கர்நாடக மாநிலம் துமகூருவில் நடந்துள்ளது.
அதாவது வளர்ப்பு நாய் ஒன்று தாய்மை உணர்வுடன் கன்றுக்குட்டிக்கு பாலூட்டி உள்ளது. அதுபற்றிய விவரம் பின்வருமாறு:-
துமகூரு அருகே குந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பசவராஜ். இவரது மனைவி கீதா. இவர்கள் தங்களது வீட்டில் பசுமாடு மற்றும் நாய் ஆகியவற்றை வளர்த்து வருகிறார்கள். அவர்கள் நாய் மற்றும் பசுமாட்டை தங்கள் குடும்பத்தில் ஒருவராக வளர்த்து வருகின்றனர். இந்த நிலையில் பசவராஜ்-கீதா தம்பதி வளர்த்து வந்த பசுமாடு சமீபத்தில் கன்றுக்குட்டி ஒன்றை ஈன்றுள்ளது. குடும்பத்துக்கு புதிய வரவாக வந்த கன்றுக்குட்டியையும் அவர்கள் பாசமாக வளர்த்து வந்துள்ளனர்.
பசவராஜ் குடும்பத்தினரை போல அவர்கள் வளர்த்து வரும் நாயும், கன்றுக்குட்டி மீது பாசத்துடன் இருந்து வந்துள்ளது. அந்த வளர்ப்பு நாயும், கன்றுக்குட்டியும் எப்போதும் ஒன்றாகவே இருந்து வந்தன. இந்த நிலையில் நேற்று கன்றுக்குட்டி பசியால் கத்தியது. அப்போது அதன் அருகே சென்ற வளர்ப்பு நாய், தாய்மை உணர்வுடன் கன்றுக்குட்டிக்கு பாலூட்டியது.
கன்றுக்குட்டியும் நாயிடம் பால் குடித்தது. இதனை பசவராஜ் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. பலரும் அந்த வீடியோவை பார்த்து நெகிழ்ச்சி அடைந்து விருப்பம் தெரிவிப்பதுடன், அதனை பகிர்ந்து வருகிறார்கள்.
Related Tags :
Next Story