‘தினத்தந்தி’ புகார் பெட்டி


‘தினத்தந்தி’ புகார் பெட்டி
x
தினத்தந்தி 17 May 2022 9:50 PM IST (Updated: 17 May 2022 9:50 PM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

புகார் பெட்டி செய்தி எதிரொலி;
குடிநீர் குழாய் உடைப்பு சீரமைப்பு 

தென்காசி மாவட்டம் கடையம் பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் வெளியே செல்லும் சாலையில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த சில மாதங்களாக தண்ணீர் வீணாக சென்றது. இதுகுறித்து கடையத்தை சேர்ந்த திருக்குமரன் ‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு அனுப்பிய பதிவு செய்தியாக பிரசுரமானது. இதன் எதிரொலியாக குடிநீர் குழாய் உடைப்பு பகுதி சீரமைக்கப்பட்டு உள்ளது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த ‘தினத்தந்தி’க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அவர் தனது நன்றியையும், பாராட்டையும் தெரிவித்து உள்ளார்.

எரியாத தெரு விளக்குகள்

நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா விஜயாபதியில் இருந்து விஸ்வாமித்திரர் கோவிலுக்கு செல்லும் சாலையில் உள்ள தெருவிளக்குகள் எரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், அருகில் உள்ள ஊர்களுக்கு செல்லும் பொதுமக்கள் மிகவும் அச்சப்படுகிறார்கள். ஆகவே, தெரு விளக்குகள் எரிவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.
ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்.

பயன்பாடு இல்லாத கழிப்பறை 

பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி பஸ் நிறுத்தம் அருகே கழிப்பறை உள்ளது. இந்த கழிப்பறை பல ஆண்டுகளாக பயன்பாடு இல்லாமல் கிடக்கிறது. இதனால் அந்த பகுதி மக்கள் சிரமப்படுகிறார்கள். எனவே, அந்த கழிப்பறையை பயன்பாட்டுக் கொண்டு வர சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
ராம்நாத், குலசேகரநத்தம்.

பூங்காவை பராமரிக்க வேண்டும்

பாளையங்கோட்டை மகாராஜநகர் 18-வது வார்டு பொன்மணி காலனியில் சிறுவர்கள் விளையாடுவதற்கும், பெரியவர்கள் நடைபயிற்சி செல்வதற்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பூங்கா திறக்கப்பட்டது. ஆனால், இந்த பூங்கா தற்போது, முறையாக பராமரிப்பு இல்லாமலும், மின் விளக்குகள் இணைப்பு இல்லாமலும் இருக்கிறது. இதனால் பொதுமக்கள் மாலை நேரத்தில் வர அச்சப்படுகிறார்கள். ஆகவே மாநகராட்சி அதிகாரிகள் இந்த பூங்காவை விரைவில் சரிசெய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
அருண், பொன்மணி காலனி.

வழிகாட்டி பெயர் பலகை வேண்டும் 

தென்காசி மாவட்டம் பண்பொழி மூன்று முக்கு பகுதியில் தென்காசி-செங்கோட்டை செல்லும் இரண்டு பிரிவு சாலையில் வழிகாட்டி பெயர் பலகை இல்லை. இதனால் செங்கோட்டை ரெயில் நிலையம், குற்றாலத்திற்கு எவ்வாறு செல்வது என்று தெரியாமல் வாகன ஓட்டிகள் குழம்புகிறார்கள். எனவே, வாகன ஓட்டிகளின் நலன் கருதி இந்த பகுதிகளில் வழிகாட்டி பெயர் பலகை வைக்க வேண்டுகிறேன்.
வேம்புராஜா, செங்கோட்டை.

சாலை சீரமைக்கப்படுமா?

சுரண்டை பஸ் நிலையம் காமராஜர் சாலையில் பராமரிப்பு பணி நடைபெற்றது. இதற்காக தோண்டப்பட்ட அந்த சாலையானது சரிசெய்யப்படவில்லை. இதனால் அந்த வழியாக ஆஸ்பத்திரி, அவசர சிகிச்சைக்கு வாகனங்களில் வருபவர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். மேலும் இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் நிலைதடுமாறி கீழே விழும் நிலை உள்ளது. ஆகவே, அந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
சுந்தரகுமார், சுரண்டை.

மரக்கிளையை அகற்ற வேண்டும்

கடையத்தில் பல்வேறு இடங்களில் மின்ஒயரில் மரக்கிளைகள் உரசுகிறது. இதனால் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் பொதுமக்கள் கடும் அவதிப்படுகிறார்கள். எனவே, மின்ஒயரில் உரசிக்கொண்டு இருக்கும் மரக்கிளைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
கண்ணன், கேளையாபிள்ளையூர்.

கொசுத்தொல்லை

தென்காசி தைக்கா தெருவில் கொசுத்தொல்லை அதிக அளவில் உள்ளது. இதனால் இரவு நேரத்தில் பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள். அந்த பகுதியில் கொசு மருந்து அடிக்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
ராஜூ, தென்காசி.

பூங்கா அமைக்கப்படுமா?

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் உடற்பயிற்சி கூடம், சிறுவர்களுக்கு பொழுது போக்கு பூங்கா அமைக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடற்பயிற்சி கூடம், பூங்கா அமைத்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
ராமன், புதுக்கோட்டை.

Next Story