மனநலம் பாதித்த பெண் தீக்குளித்து தற்கொலை
பொள்ளாச்சியில் மனநலம் பாதித்த பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி நல்லி கவுண்டர் லே-அவுட்டை சேர்ந்தவர் கிட்டுமணி. இவரது மனைவி சுஜாதா (வயது 43). இவர் மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததாக தெரிகிறது. இதனால் தனக்கு பயமாக இருக்கிறது, யாராவது உடன் இருங்கள் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை சுஜாதா தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுஜாதா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் பொள்ளாச்சி நகர கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story