சோளிங்கர் தாலுகாவில் ஜமாபந்தி
சோளிங்கர் தாலுகாவில் 25-ந் தேதி முதல் 3 நாட்கள் ஜமாபந்தி நடக்கிறது.
சோளிங்கர்
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் தாலுகாவில் 3 நாட்கள் ஜமாபந்தி நடக்கிறது. 25-ந் தேதி சோளிங்கர் வருவாய் வட்டத்துக்கு உட்பட்ட வேலம், ஒழுகூர், தலங்கை, காட்ரம்ப்பாக்கம், வடகடப்பந்தாங்கல், மேல் வெங்கடாபுரம், ஜம்புகுளம், வாங்கூர், கொளத்தேரி, சித்தாத்தூர், மருதாலம், கோவிந்தச்சேரி, கோவிந்தச்சேரி குப்பம், மேல் வீராணம், பொன்னப்பந்தாங்கல் ஆகிய கிராமங்களுக்கும், 26-ந் தேதி சோளிங்கர் உள் வட்டத்திற்கு உட்பட்ட தகரகுப்பம், செங்கல்நத்தம், கேசவனாங்குப்பம், செக்கடிக்குப்பம், சோமசமுத்திரம், கொண்டபாளையம், பாண்டியநல்லூர், ரெண்டாடி, கல்லாலங்குப்பம், கொடைகல், சோளிங்கர், கல்பட்டு, புலிவலம், வெங்குபட்டு, பரவத்தூர், அக்கச்சி குப்பம் ஆகிய பகுதிகளுக்கும், 27-ந் தேதி வைலாம்பாடி, கூடலூர், ஐபேடு, அரியூர் மற்றும் பாணாவரம் உள்வட்டத்திற்கு உட்பட்ட கரிக்கல், தாளிக்கால், தப்பூர், குன்னத்தூர், பழையபாளையம், போளிப்பாக்கம், ஆயல், சூரை, பாணாவரம், கூத்தம்பாக்கம், புதூர் கீழ்வீராணம், நந்தி மங்கலம், மங்கலம் ஆகிய பகுதிகளுக்கு சோளிங்கர் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நடைபெற உள்ளது.
பொதுமக்கள் மனுக்களை அளித்து அதற்காணலாம் என தாசில்தார் வெற்றி குமார் தெரிவித்தார்.
Related Tags :
Next Story