தனியார் வங்கி மேலாளர் வீட்டில் 12 பவுன் நகை திருட்டு


தனியார் வங்கி மேலாளர் வீட்டில் 12 பவுன் நகை திருட்டு
x
தினத்தந்தி 17 May 2022 10:07 PM IST (Updated: 17 May 2022 10:07 PM IST)
t-max-icont-min-icon

கவுண்டம்பாளையத்தில் தனியார் வங்கி மேலாளர் வீட்டில் 12 பவுன் நகை திருட்டு போனது.

துடியலூர்

கோவையை அடுத்த கவுண்டம்பாளையம் நடராஜன் நகர் 7-வது வீதியை சேர்ந்தவர் பிரபு (வயது 39). இவர் ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தனியார் வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். பிரபு சம்பவத்தன்று தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் பழனி கோவிலுக்கு சென்றார். 

  இந்த நிலையில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அங்குள்ள அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த 12 பவுன் தங்க நகைளை திருடிக்கொண்டு தப்பிச்சென்றனர். 

 கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பிய பிரபு, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 12 பவுன் நகை திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து அவர் துடியலூர் போலீசில் புகார் அளித்தார்.

 இந்த புகாரின் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து, திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

Next Story