மதுபாட்டில் வாங்குவதில் மோதல்; கூலி தொழிலாளிக்கு பீர்பாட்டில் அடி
மதுபாட்டில் வாங்குவதில் மோதலில் கூலி தொழிலாளிக்கு பீர்பாட்டில் அடி விழுந்தது.
நொய்யல்
கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அருகே உள்ள காந்திநகர் 6-வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன்(வயது 33). கூலி தொழிலாளியான இவர் மூலிமங்கலம் பிரிவு எதிரே உள்ள டாஸ்மாக் கடையில் பீர் பாட்டில் வாங்கிக்கொண்டிருந்தார். அப்போது புகழூர் கச்சியப்பன் காலனி பகுதியை சேர்ந்த மூர்த்தி(53) என்பவர் ராமச்சந்திரனை பார்த்து வரிசையில் நின்று பீர்பாட்டில் வாங்கமாட்டாயா? என கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மூர்த்தி, ராமச்சந்திரன் கையில் வைத்திருந்த பீர் பாட்டிலை பிடுங்கி ராமச்சந்திரன் முகத்தில் திடீரென தாக்கியுள்ளார். இதில் அவருக்கு முகத்தில் ரத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அவரை வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து ராமச்சந்திரன் வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நெப்போலியன் மூர்த்தி மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story