அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணா போராட்டம்


அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 17 May 2022 10:11 PM IST (Updated: 17 May 2022 10:11 PM IST)
t-max-icont-min-icon

அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணா போராட்டம் நடைபெற்றது.

கரூர்
ஓய்வூதியர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் உள்ள குறைபாடுகளை களைந்து ஜூலை 2022 முதல் அமல்படுத்தப்பட உள்ள காப்பீட்டு திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டிய அம்சங்களை ஓய்வூதியர் சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும். 1.7.2022 முதல் காசில்லா மருத்துவத்தை உறுதிப்படுத்திட வேண்டும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவ செலவு முறையீடுகளுக்கு 30.6.2022-க்குள் செலவு தொகையின் காப்பீட்டு நிறுவனம் வழங்க வேண்டும். தேர்தல் வாக்குறுதியில் கூறப்பட்டப்படி சத்துணவு, அங்கன்வாடி, கிராம உதவியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7 ஆயிரத்து 850 வழங்க வேண்டும். கூடுதல் ஓய்வூதியம் பெறும் தகுதியான வயதை 80-ல் இருந்து 70-ஆக குறைத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கரூர் தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் சாமுவேல் சுந்தரபாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட இணை செயலாளர் ஜீவானந்தம் வரவேற்றார். மாவட்ட செயலாளர் மோகன்குமார் கோரிக்கையை வலியுறுத்தி உரையாற்றினார். இதில் மாவட்ட, வட்ட நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் நாராயணன் நன்றி கூறினார்.

Next Story