கார் மோதி லாரி டிரைவர் பலி
கார் மோதி லாரி டிரைவர் பலியானார்.
கிருஷ்ணராயபுரம்
கரூர் மாவட்டம், மாயனூர் அருகே உள்ள சங்கரமலப்பட்டியைச் சேர்ந்தவர் மாணிக்கவாசகம்(வயது 48). லாரி டிரைவர். இவர் நேற்று முன்தினம் சொந்த வேலையாக தனது மோட்டார் சைக்கிளில் தனது வீட்டிலிருந்து கிருஷ்ணராயபுரம் பஸ் நிலையத்திற்கு வந்து திருச்சி-கரூர் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது கிருஷ்ணராயபுரம் கீழ அக்ரஹாரத்தில் சேர்ந்த சேகர் மகன் அமிர்தீஸ்வரன் (24) என்பவர் ஓட்டி வந்த கார் மாணிக்கவாசகத்தின் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மாணிக்கவாசகம் பலத்த காயம் அடைந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மாணிக்கவாசகத்தின் மனைவி ரேணுகா கொடுத்த புகாரின்பேரில் மாயனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story