தபால் நிலையத்தை தமிழ் தேசிய பேரியக்கத்தினர் முற்றுகை


தபால் நிலையத்தை தமிழ் தேசிய பேரியக்கத்தினர் முற்றுகை
x
தினத்தந்தி 17 May 2022 10:24 PM IST (Updated: 17 May 2022 10:24 PM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலம் தபால் நிலையத்தை தமிழ் தேசிய பேரியக்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விருத்தாசலம், 

தமிழ் தேசிய பேரியக்கத்தினர் துணை தலைவர் முருகன் தலைமையில் விருத்தாசலம் ஜங்ஷன் சாலையில் உள்ள தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தமிழ்நாட்டில் தபால்துறை, ரெயில்வே, என்.எல்.சி., துறைமுகம், விமான நிலையங்கள் உள்ளிட்ட இந்திய அரசு நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்கள் அனைத்திலும் தகுதியுள்ள தமிழ்நாட்டு இளைஞர்களை திட்டமிட்டு புறக்கணிக்கும் மத்திய அரசை கண்டித்தும், கடலூர் மாவட்டத்தில் தபால்துறையில் வடமாநிலத்தை சேர்ந்தவர்களை பணியில் அமர்த்தியிருப்பதை தவிர்க்க வேண்டும்,  தபால் துறை அலுவலகங்கள் அனைத்திலும் 90 சதவீத வேலைவாய்ப்பினை தமிழர்களுக்கே வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இந்த போராட்டத்தில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Next Story