விழுப்புரம் மாவட்டத்தில் 39 போலீசார் இடமாற்றம்


விழுப்புரம் மாவட்டத்தில் 39 போலீசார் இடமாற்றம்
x
தினத்தந்தி 17 May 2022 10:24 PM IST (Updated: 17 May 2022 10:24 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்தில் 39 போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பரசுராமன் நெடுஞ்சாலை ரோந்துப்பிரிவு எண் 9-க்கும், அனந்தபுரம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் புகழேந்தி நெடுஞ்சாலை ரோந்துப்பிரிவு எண் 3-க்கும், மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீபால், வளவனூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் ஆகியோர் நெடுஞ்சாலை ரோந்துப்பிரிவு எண் 8-க்கும், கண்டாச்சிபுரம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரவி வளத்தி போலீஸ் நிலையத்திற்கும், விழுப்புரம் போக்குவரத்து போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் விழுப்புரம் நகர போலீஸ் நிலையத்திற்கும், அங்கிருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சூடாமணி திண்டிவனம் போலீஸ் நிலையத்திற்கும், கஞ்சனூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் விழுப்புரம் நகர போலீஸ் நிலையத்திற்கும் இவர்கள் உள்பட மொத்தம் 39 போலீசார், மாவட்டத்திற்குள் வெவ்வேறு போலீஸ் நிலையங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். இதற்கான உத்தரவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா பிறப்பித்துள்ளார்.

Next Story