ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் கலெக்டர் ஆய்வு
கொண்டபாளையம் ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
சோளிங்கர்
சோளிங்கரை அடுத்த கொண்டபாளையம் ஸ்ரீராம் நகரில் உள்ள அரசினர் ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் கலெக்டர் பாஸ்கரபாண்டியன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது விடுதியில் தங்கி பயின்றுவரும் மாணவர்களுக்கு தேவையான மின்விசிறிகள், எல்.இ.டி. விளக்குகள், பாய் மற்றும் தலையணை, தண்ணீர் சூடு செய்யும் கருவி, உணவருந்தும் தட்டுகள் உள்ளிட்ட பொருட்களை வழங்கினார். மேலும் மாணவர்கள் எவ்வாறு படிக்கின்றனர் என கேட்டறிந்தார்.
இதனைத்தொடர்ந்து விடுதியின அருகில் மைதானத்தின் எதிரில் உள்ள குடியிருப்புகளில் இருந்து குப்பைகள், பிளாஸ்டிக் பொருட்கள், மதுபான பாட்டில்கள் தூக்கி எறியப்பட்டு இருந்ததை பார்த்து வீட்டின் உரிமையாளர்களை கலெக்டர் எச்சரித்தார். தொடர்ந்து நகராட்சி தூய்மை பணியாளர்கள் மைதானத்தில் கொட்டப்பட்டு இருந்த குப்பைகளை அகற்றி தூய்மை செய்தனர். மேலும் மைதானத்தில் உள்ள முள் செடிகளை அகற்றி மாணவர்கள் பயன்படும் வகையில் சீரமைத்து தர உத்தரவிட்டார்.
மைதானத்தில் சுற்றி மரக்கன்றுகளை நடவு செய்யவும் அறிவுறுத்தினார். அப்போது மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் இளவரசி, சோளிங்கர் தாசில்தார் வெற்றி குமார், விடுதி காப்பாளர் ராஜேஷ் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள், நகராட்சி பணியாளர்கள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story