உளுந்தூர்பேட்டை அருகே கிணற்றில் ஆண் பிணம்


உளுந்தூர்பேட்டை அருகே கிணற்றில் ஆண் பிணம்
x
தினத்தந்தி 17 May 2022 10:33 PM IST (Updated: 17 May 2022 10:33 PM IST)
t-max-icont-min-icon

உளுந்தூர்பேட்டை அருகே கிணற்றில் அடையாளம் தெரியாமல் பிணமாக கிடந்த ஆண் நபர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்

உளுந்தூர்பேட்டை

ஆண் பிணம்

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எலவனாசூர்கோட்டை சிவன்கோவில் பகுதியில் பயன்படுத்தப்படாத கிணற்றில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் மிதந்தது. இதைப்பார்த்த அந்த பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் எலவனாசூர்கோட்டை போலீசார் அங்கு விரைந்து வந்து கிணற்றில் பிணமாக மிதந்த நபரின் உடலை மீட்டனர். ஆனால் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் எதுவும் தெரியவில்லை. 

கொலையா?

பின்னர் அந்த நபரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து கிணற்றில் பிணமாக மிதந்த நபர் யார்? அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் அவரை கொலை செய்து உடலை கிணற்றில் வீசிச்சென்றனரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story