லாரி கல்லூரி சுற்றுச்சுவரில் ேமாதி விபத்து
உடுமலையில் நிலைதடுமாறிய லாரி கல்லூரி சுற்றுச்சுவரில் ேமாதி விபத்துக்குள்ளானது.
போடிப்பட்டி
உடுமலையில் நிலைதடுமாறிய லாரி கல்லூரி சுற்றுச்சுவரில் ேமாதி விபத்துக்குள்ளானது.
உரம் பாரம்
மதுரையில் இருந்து உரம் பாரம் ஏற்றிக்கொண்டு கேரளா நோக்கி ஒரு லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நேற்று அதிகாலை 3.30 மணி அளவில் மகளிர் கல்லூரி முன் சாலையில் வைக்கப்பட்டுள்ள தடுப்புகளை லாரி கடக்க முயன்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி நிலை தடுமாறி ஓடியது. அப்போது எதிரே பயணிகளை ஏற்றிக்கொண்டு வேன் அதிக வேகத்தில் வருவது தெரிந்தது. வேனும்- லாரியும் மோதி பெரும் விபத்து ஏற்படுவதைத் தவிர்க்கும் விதமாக லாரியை டிரைவர் சாமர்த்தியமாக இடதுபுறம் திருப்பினார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோர பள்ளத்தில் பாய்ந்தது. பின்னர் கல்லூரி சுற்றுச்சுவரில் மோதி சாய்ந்தது. இந்த விபத்தில் லாரியின் இடதுபுறம் மற்றும் கல்லூரி சுற்றுச்சுவர் சேதமடைந்தது.
டிரைவர் உயிர் தப்பினார்
விபத்தில் லேசான காயங்களுடன் டிரைவர் உயிர் தப்பினார். அதிகாலை நேரம் என்பதாலும், இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதுவது தவிர்க்கப்பட்டதாலும் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டது. விபத்து குறித்து உடுமலை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story