தர்மபுரி அருகே செல்போன் திருடிய 2 பேர் சிக்கினர் போலீசார் தீவிர விசாரணை
தர்மபுரி அருகே செல்போன் திருடிய 2 பேர் சிக்கினர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் செல்போன் திருட்டுகள் அதிகரித்து வருகின்றன. இது தொடர்பான புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி திருடப்பட்ட செல்போன்களை மீட்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். செல்போன் திருட்டுகளில் ஈடுபடுபவர்களை கண்டறிய தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் புலிக்கரை அருகே இரவில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த 2 பேரை மதிகோன்பாளையம் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர்கள் செல்போன் திருடும் கும்பலை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. பல்வேறு இடங்களில் செல்போன்களை திருடி விற்பனை செய்யும் பலர் இவர்களுடன் தொடர்புடையவர்கள் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக சிக்கிய 2 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story