அ.பாப்பாரப்பட்டியில் அபிஷ்ட வரதராஜ சாமி கோவில் தேரோட்டம்
அ.பாப்பாரப்பட்டியில் அபிஷ்ட வரதராஜ சாமி கோவில் தேரோட்டம் நடந்தது.
பாப்பாரப்பட்டி:
தர்மபுரி மாவட்டம் அ.பாப்பாரப்பட்டியில் அபிஷ்ட வரதராஜ சாமி கோவில் தேரோட்டம் நடந்த அறநிலையத்துறை தடை விதித்திருந்தது. இதையடுத்து சென்னை கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரணை நடத்திய கோர்ட்டு உரிய பாதுகாப்புடன் தேர் இழுக்க தடையில்லை என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதையடுத்து அ.பாப்பாரப்பட்டி அபிஷ்ட வரதராஜசாமி கோவில் தேரோட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. சாமி சிறப்பு அலங்காரத்துடன் தேரில் எழுந்தருள காலையில் ரதம் நிலை பெயர்த்து நிறுத்தப்பட்டது. மாலை பக்தர்கள் தேரை வடம் பிடித்து தேரை இழுத்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story