மோட்டார் சைக்கிள்கள் மோதி செங்கல் சூளை தொழிலாளி உள்பட 2 பேர் சாவு கம்பைநல்லூர் அருகே பரிதாபம்
கம்பைநல்லூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதி கொண்ட விபத்தில் செங்கல் சூளை தொழிலாளி உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
மொரப்பூர்:
கம்பைநல்லூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதி கொண்ட விபத்தில் செங்கல் சூளை தொழிலாளி உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
மோட்டார் சைக்கிள்கள் மோதல்
கிருஷ்ணகிரி மாவட்டம், வாடமங்கலத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 52). இவர் தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லூர் அருகே உள்ள உச்சம்பட்டி பகுதியில் செங்கல் சூளை ஒன்றில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் மாலை வேலை முடிந்த பின்னர் கோவிந்தராஜ் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு சென்று கொண்டிருந்தார்.
கம்பைநல்லூர் அருகே கொண்டம்பட்டி தண்ணீர் தொட்டி அருகில் சென்றபோது எதிரே கதிர்நாயக்கன்அள்ளியை சேர்ந்த நவீன்(27) என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். அப்போது 2 மோட்டார் சைக்கிள்களும் எதிர்பாராதவிதமாக மோதி கொண்டன. இந்த விபத்தில் கோவிந்தராஜ் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
போலீசார் விசாரணை
இதில் படுகாயமடைந்த நவீனை அக்கம் பக்கத்தினர் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே நவீன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கம்பைநல்லூர் போலீசார் விரைந்து சென்று 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து கம்பைநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மோட்டார் சைக்கிள்கள் மோதி 2 பேர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story