தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 17 May 2022 10:39 PM IST (Updated: 17 May 2022 10:39 PM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

குடிநீர் இன்றி மக்கள் அவதி 
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், திருவெள்ளறை  பஞ்சாயத்தில் காவிரி  கூட்டுக்குடிநீர் திட்டத்தில் இருந்து  வழங்கப்படும்  குடிநீர், கடந்த ஒரு வாரமாக  முறையாக வழங்கப்படவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் தங்களின் அன்றாட தேவைக்கு போதிய குடிநீர் இன்றி பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
சீனிவாசன், திருவெள்ளறை, திருச்சி. 
குண்டும், குழியுமான சாலை 
திருச்சி மாநகராட்சி  26-வது வார்டு  பெல்ஸ் கிரவுண்ட் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சாலை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இரவு நேரத்தில் இந்த சாலை வழியாக செல்பவர்கள் சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் அதில் வாகனத்தை விட்டு நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
விஜய் ஆனந்த், பெல்ஸ் கிரவுண்ட், திருச்சி. 
வேகத்தடை அமைக்க வேண்டுகோள்
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், மண்ணச்சநல்லூர் பேரூராட்சி மண்ணச்சநல்லூர்- சமயபுரம் சாலையில் உள்ள 43  மேல சீதேவிமங்களம் வளைவு அருகில் அடிக்கடி விபத்து நடக்கிறது. இதனால் இப்பகுதியில் வேகத்தடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், 43 மேல சீதேவிமங்கலம், திருச்சி. 

Next Story