ஜமாபந்தியில் 10 பேருக்கு மின்னணு ரேஷன் கார்டு
மயிலாடுதுறையில் நடைபெற்ற ஜமாபந்தியில் 10 பேருக்கு மின்னணு ரேஷன் கார்டை கலெக்டர் லலிதா வழங்கினார்.
மயிலாடுதுறை
மயிலாடுதுறை தாலுகா அலுவலகத்தில், மாவட்ட கலெக்டர் லலிதா தலைமையில் ஜமாபந்தி(மக்கள் குறை தீர்க்கும் முகாம்) நேற்று நடந்தது. முகாமில், பொது மக்களிடம் இருந்து கொடுக்கப்பட்ட கோரிக்கை மனுக்களை கலெக்டர் பெற்றுக் கொண்டார்.
அப்போது அவர் கூறுகையில், அடுத்த மாதம்(ஜூன்) 1-ந் தேதி வரை ஜமாபந்தி நடைபெறுகிறது. பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தப்பட்டு ஜமாபந்தியின் நிறைவு நாளில் அதற்கான ஆணைகள் வழங்கப்படும். சீர்காழி, குத்தாலம், தரங்கம்பாடி ஆகிய தாலுகாக்களிலும் ஜமாபந்தி நடைபெறுகிறது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
10 பேருக்கு மின்னணு ரேஷன் கார்டு
தொடர்ந்து ஜமாபந்தியில் மனு அளித்த 10 பயனாளிகளுக்கு உடனடியாக மின்னணு ரேஷன் கார்டுகளை கலெக்டர் வழங்கினார்.
இதில், உதவி இயக்குனர் (நிலஅளவை) சவுந்தரராஜன், மயிலாடுதுறை தாசில்தார் மகேந்திரன், சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் தையல்நாயகி, வட்ட வழங்கல் அலுவலர் சித்ரா மற்றும் கிராம வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story