கார் மோதி கூலி தொழிலாளி பலி


கார் மோதி கூலி தொழிலாளி பலி
x

கார் மோதி கூலி தொழிலாளி பலியானார்.

கிருஷ்ணராயபுரம்
கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள பொய்கைபுத்தூரைச் சேர்ந்தவர் சங்கபிள்ளை மகன் சத்தியமூர்த்தி(வயது 57). விவசாய கூலி தொழிலாளியான இவர் சம்பவத்தன்று கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கம்மநல்லூர் ரெட்டைமரத்தான் கோவில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது கரூர் கோயம் பள்ளியைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் சங்கர் (24) என்பவர் ஓட்டி வந்த கார் எதிர்பாராதவிதமாக சத்தியமூர்த்தி மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் உயிரிழந்தார். இதுகுறித்து லாலாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story