எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆர்ப்பாட்டம்
வேலூரில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர்
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ஒரு மசூதிைய சீல் வைக்க அம்மாநில கோர்ட்டு உத்தரவிட்டதை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் வேலூர் தலைமை தபால் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு தொகுதி தலைவர் அபுபக்கர் தலைமை தாங்கினார். இணைச் செயலாளர் ஜாபர்கான் வரவேற்றார். நிர்வாகிகள் ஷம்சுலுதாபாகவி, மகபூப்ரகுமான் உள்பட பலர் கோரிக்கைகள் குறித்து பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில், மசூதியை சீல் வைக்க வழக்கப்பட்ட உத்தரவை கண்டித்தும், மசூதியில் தொழுகை நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story