பொன்னமராவதி அருகே வனத்துறை டிரைவரின் மோட்டார் சைக்கிள் தீ வைத்து எரிப்பு மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
பொன்னமராவதி அருகே வனத்துறை தற்காலிக டிரைவரின் மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பொன்னமராவதி:
திருட்டு
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே சுந்தரசோழபுரம் கிராமத்தில் இன்று மலையபெருமாள் அய்யனார் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஆடல் பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பொன்னமராவதி வனத்துறையில் தற்காலிக வாகன டிரைவராக பணிபுரிந்து வருபவர் மதியாணி பகுதியை சேர்ந்த சுப்பையா மகன் பழனிசாமி. இவர் சுந்தரசோழ புரத்தில் நடைபெற்ற ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். பின்னர் நிகழ்ச்சி முடிந்து வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தும் மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதுகுறித்து பொன்னமராவதி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
மோட்டார் சைக்கிள் எரிப்பு
இந்நிலையில் சுந்தரசோழபுரம் பகுதியில் உள்ள கம்பிபாலம் பகுதியில் வனப்பகுதிக்குள் ஒரு மோட்டார் சைக்கிள் எரிந்த நிலையில் கிடந்தது. இதை அந்தவழியாக சென்றவர்கள் பார்த்து பழனிசாமிக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில், விரைந்து வந்து பார்த்த பழனிசாமி எரிந்து கிடந்த மோட்டார் சைக்கிள் தன்னுடையது தான் என்று கூறினார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை திருடி சென்று தீ வைத்து எரித்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story