விருத்தாசலம்-சேலம் இடையே மேலும் ஒரு பயணிகள் ரெயில் இயக்கம்
சின்னசேலம் வழியாக விருத்தாசலம்-சேலம் இடையே மேலும் ஒரு பயணிகள் ரெயில் வருகிற 23 ந் தேதி முதல் இயக்கப்படுகிறது
சின்னசேலம்
கொரோனாவால் ரத்து
விருத்தாசலத்தில் இருந்து சின்னசேலம் ரெயில் நிலையம் வழியாக சேலத்துக்கு 2 பயணிகள் ரெயில்களும், மறு மார்க்கத்தில் சேலத்தில் இருந்து விருதாச்சலத்துக்கு வரை 2 பயணிகள் ரெயில்களும் தினசரி இயக்கப்பட்டு வந்தது. அதேபோல பெங்களூர் சிட்டி-காரைக்கால், காரைக்கால்-பெங்களூர் சிட்டி தினசரி பயணிகள் ரெயில், சேலம்- சென்னை, சென்னை- சேலம் தினசரி விரைவு ரெயில், புதுச்சேரி-மங்களூர், மங்களூர் -புதுச்சேரி, புதுச்சேரி- யஸ்வந்த்பூர், யஸ்வந்த்பூர் - புதுச்சேரி வாராந்திர ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தன. ஆனால் கொரோனா தொற்று பரவல் காரணமாக மேற்கண்ட ரெயில்களை ரத்து செய்து ரெயில்வேதுறை அறிவித்து இருந்தது.
மீண்டும் இயக்கம்
தற்போது கொரோனா தொற்று பரவல் குறைந்துள்ளதையடுத்து ரத்து செய்யப்பட்ட ரெயில்கள் படிப்படியாக இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி சேலம்-விருத்தாசலம், விருத்தாசலம்-சேலம் பயணிகள் ரெயில் தினமும் ஒரு முறையும், சென்னை- சேலம், சேலம்- சென்னை விரைவு ரெயில் படிப்படியாக விட்டது. அதேபோல புதுச்சேரி-மங்களூர், மங்களூர் -புதுச்சேரி, புதுச்சேரி- யஸ்வந்த்பூர், யஸ்வந்த்பூர் - புதுச்சேரி வாராந்திர ரெயில்களும் இயக்கப்படுகிறது.
மேலும் ஒரு ரெயில்
இந்த நிலையில் சின்னசேலம் வழியாக விருத்தாசலம்-சேலம் இடையே வருகிற 23-ந் தேதி மேலும் ஒரு பயணிகள் ரெயில் இயக்கப்படுகிறது. சேலத்தில் இருந்து காலை 10.10 மணிக்கு புறப்படும் பயணிகள் ரெயில்(வண்டி எண் 06896) சேலம் மார்க்கெட், சேலம் டவுண், அயோத்தியாப்பட்டினம், மின்னாம்பள்ளி, வாழப்பாடி, ஏத்தாப்பூர் ரோடு, பெத்தநாயக்கன்பாளையம், ஆத்தூர், தலைவாசல், மேல்நாரியப்பனூர், வழியாக சின்னசேலத்திற்கு 11.44 மணிக்கு வந்து சிறுவத்தூர், புக்கிரவாரி, முகாசபரூர் வழியாக பகல் 1.05 மணிக்கு விருத்தாசலம் சென்றடைகிறது.
மறுமார்க்கத்தில் விருத்தாசலம் ரெயில் நிலையத்தில் இருந்து மதியம் 2.05 மணிக்கு புறப்படும் பயணிகள் ரெயில்( வண்டி எண் 06895) மதியம் 3 மணிக்கு சின்னசேலம் ரெயில் நிலையத்துக்கு வந்து மாலை 4.40 மணிக்கு சேலத்தை சென்றடைகிறது. இந்த தகவலை சின்னசேலம் ரெயில் நிலைய அலுவலர் தெரிவித்தார்.
பொதுமக்கள் கோரிக்கை
மேலும் கொரோனா தொற்றால் ரத்து செய்யப்பட்ட பெங்களூர்-காரைக்கால், காரைக்கால்-பெங்களூர் பயணிகள் ரெயிலை மீண்டும் இயக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
Related Tags :
Next Story