பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு


பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
x
தினத்தந்தி 17 May 2022 11:18 PM IST (Updated: 17 May 2022 11:18 PM IST)
t-max-icont-min-icon

பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்துள்ளதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்துள்ளதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
பவானிசாகர் அணை
ஈரோடு மாவட்டத்தில் முக்கிய அணையாக விளங்குவது பவானிசாகர் அணை. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடியாகும். அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரால் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதுதவிர ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது பவானிசாகர் அணையாகும்.
பவானிசாகர் அணைக்கு நீலகிரி மாவட்டத்தில் இருந்து வரும் பவானி ஆறும், கூடலூர் மலைப்பகுதியில் இருந்து வரும் மோயாரும் நீர்வரத்து ஆதாரமாக விளங்குகிறது.
நீர் வரத்து அதிகரிப்பு
கடந்த சில மாதங்களாக பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் வறண்ட வானிலை நிலவியது. தற்போது நீலகிரி மலைப் பகுதியில் பரவலாக மழை பெய்துள்ளது. இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து சற்று அதிகரித்தது. நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 479 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று இரவு 8 மணியளவில் பவானிசாகர் அணைக்கு வரும் தண்ணீர் அளவு வினாடிக்கு 1,939 கன அடியாக அதிகரித்தது.
நீர் மட்டம் உயர்வு
அணைக்கு தண்ணீர் வரத்து குறைந்ததாலும் அதேசமயம் அணையில் இருந்து பாசனத்திற்காக திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரித்ததாலும் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்று இரவு 8 மணிக்கு பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 81.30 அடியாக இருந்தது. 
அணையில் இருந்து பவானி ஆற்றின் மூலம் வினாடிக்கு 150 கன அடி தண்ணீர் குடிநீருக்காகவும், தடப்பள்ளி அரக்கன் கோட்டை பாசன பகுதிக்கு வினாடிக்கு 400 கன அடி தண்ணீரும் கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 5 கனஅடி தண்ணீரும் திறக்கப்பட்டது. 

Next Story