வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு


வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு
x
தினத்தந்தி 17 May 2022 11:23 PM IST (Updated: 17 May 2022 11:23 PM IST)
t-max-icont-min-icon

தேனியில் வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் நகை மற்றும் பொருட்களை திருடி சென்றனர்.

தேனி: 

தேனி கே.ஆர்.ஆர். நகர் 3-வது தெருவில் டாக்டர் பாப்புசாமி என்பவரின் வீட்டில்  பூட்டை உடைத்து 16½ பவுன் நகைகள் மற்றும் பொருட்கள் திருட்டு போயின. இதுகுறித்து தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கே.ஆர்.ஆர். நகர் 3-வது தெருவை சேர்ந்த ஜோதிடர் புகழேந்தி, 2-வது தெருவை சேர்ந்த தனியார் கண் மருத்துவமனை மேலாளர் கார்த்திகேயன் ஆகியோர் வீடுகளிலும்  பூட்டு உடைக்கப்பட்டு கதவுகள் திறந்து கிடந்தன. வீடுகளை பூட்டிவிட்டு வெளியூர் சென்றிருந்த நிலையில் மர்ம நபர்கள் இந்த சம்பவத்தை அரங்கேற்றி உள்ளனர். கார்த்திகேயன் இதுகுறித்து தகவல் அறிந்ததும் தனது வீட்டுக்கு வந்து பார்வையிட்டார். அப்போது அவருடைய வீட்டில் ஒரு ஜோடி வெள்ளி கொலுசு மற்றும் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள கைக்கடிகாரம் ஆகியவை திருட்டு போயிருப்பது தெரியவந்தது. மேலும், புகழேந்தி வீட்டில் பூட்டை உடைத்து திருட முயற்சி நடந்துள்ளதாகவும் தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்தும் தேனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவங்கள் அப்        பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story