தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 17 May 2022 5:55 PM GMT (Updated: 17 May 2022 5:55 PM GMT)

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
எரியாத தெருவிளக்குகள்
திண்டுக்கல்-நத்தம் சாலையில் நாகல்நகர் மேம்பாலம் அருகில் இருந்து ராஜலட்சுமிநகர் செல்லும் வழியில் பொருத்தப்பட்டுள்ள தெருவிளக்குகள் பழுதடைந்து எரியாமல் உள்ளன. இதனால் இரவில் அந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. பெண்கள் அந்த வழியாக செல்லவே அச்சப்படுகின்றனர். எனவே பழுதடைந்த தெருவிளக்குகளை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகரிகள் முன்வர வேண்டும்.
-விக்னேஷ், திண்டுக்கல்.
அரசு மருத்துவமனை ‘லிப்ட்’ பழுது
திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் ஒருங்கிணைந்த மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள ‘லிப்ட்’ பழுதடைந்து உள்ளது. இதனால் சிகிச்சைக்காக வரும் கர்ப்பிணிகள், பிரசவமான பெண்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே பழுதடைந்த ‘லிப்ட்’டை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-கோவிந்தராஜ், திண்டுக்கல்.
முறிந்து விழுந்த மின்கம்பம்
உத்தமபாளையம் தாலுகா சுருளிப்பட்டியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பலத்த காற்றுடன் மழை பெய்தது. அப்போது, அப்பகுதியில் இருந்த மின்கம்பம் முறிந்து சாலையோரத்தில் விழுந்தது. உடனே அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பின்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாற்று ஏற்பாடு செய்து வீடுகளுக்கு மின்சாரம் வழங்கினர். ஆனால் முறிந்து விழுந்த மின்கம்பத்தை அகற்றவில்லை. எனவே மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பத்தை நட்டு வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பார்த்திபன், சுருளிப்பட்டி.
அரசு பஸ் இயக்கப்படுமா?
திண்டுக்கல் சீலப்பாடி பிரிவில் இருந்து சீலப்பாடிக்கு செல்லும் வழியில் உள்ள கிராமப்பகுதிகளுக்கு அரசு பஸ் இயக்கப்படுவதில்லை. மேலும் திண்டுக்கல்லில் இருந்து சீலப்பாடிக்கு செல்லும் அரசு பஸ்களும் இந்த கிராமங்கள் வழியாக செல்வதில்லை. எனவே சீலப்பாடி பிரிவில் இருந்து சீலப்பாடிக்கு டவுன் பஸ் இயக்கப்படுமா?
-பழனிச்சாமி, சீலப்பாடி.

Next Story