டிராக்டர் மோதி மீனவர் சாவு
டிராக்டர் மோதி மீனவர் உயிரிழந்தார்
நாகூர்
நாகூர் பட்டினச்சேரி ஆரிய நாட்டு நடுத்தெருவை சேர்ந்தவர் குப்புசாமி (வயது 70). மீனவர். இவர் நேற்று முன்தினம் இரவு வெட்டாற்றின் கரை வழியாக வீட்டுக்கு நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது பாலக்காடு மெயின்ரோடு பகுதியை சேர்ந்த சரவண பாண்டியன் (40) என்பவர் ஓட்டி வந்த டிராக்டர் எதிர்பாராதவிதமாக குப்புசாமி மீது மோதியது. இதில், பலத்த காயம் அடைந்த அவரை நாகூர் போலீசார் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இந்த விபத்து குறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவண பாண்டியனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story