மனுநீதி நாள் முகாமில் 49 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
அப்துல்லாபுரத்தில் நடந்த மனுநீதி நாள் முகாமில் 49 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
வேலூர்,
வேலூரை அடுத்த அப்துல்லாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மனுநீதி நாள் முகாம் நடந்தது. வேலூர் ஒன்றியக்குழு தலைவர் அமுதாஞானசேகரன், துணைத்தலைவர் மகேஸ்வரி, அப்துல்லாபுரம் ஊராட்சிமன்ற தலைவர் சக்திவேல், முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் திவாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேலூர் தாசில்தார் செந்தில் வரவேற்று பேசினார்.
முகாமிற்கு வேலூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலஅலுவலர் பேபிஇந்திரா தலைமை தாங்கி 49 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 37 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.
தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஞானசேகரன், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் நரசிம்மன், வட்ட வழங்கல் அலுவலர் சத்தியமூர்த்தி, ஆதிதிராவிடர் நலத்துறை தாசில்தார் குமார், வேலூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வின்சென்ட் ரமேஷ்பாபு, ராஜன்பாபு, மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மண்டல துணை தாசில்தார் பிரியா நன்றி கூறினார்.
Related Tags :
Next Story