நாகையில் ஓய்வூதியர்கள் தர்ணா
கோரிக்கைகளை வலியுறுத்தி நாகையில் ஓய்வூதியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம்
நாகையில் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் நேற்று தர்ணா போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு மாவட்டத்தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். வட்டத்தலைவர் காதர்மொகிதீன் முன்னிலை வகித்தார். சங்கத்தின் மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் அன்பழகன், தொழிற்சங்க கூட்டமைப்பு தலைவர் சிவக்குமார், சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் தங்கமணி உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
கூடுதல் ஓய்வூதியம்
சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம ஊழியர்கள், வனத்துறை காவலர்கள் மற்றும் நகராட்சி எழுத்தாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850 வழங்க வேண்டும்.
தற்போதைய மருத்துவ காப்பீடு திட்டம் 3.6.2022-ல் முடிவடைகிறது. இத்திட்டம் 2022-ம் ஆண்டு புதுப்பிக்கப்படும்போது, ஓய்வூதியர் சங்கங்களின் கருத்தை கேட்டறிந்தபின் குறைபாடின்றி புதுப்பிக்க வேண்டும்.
80 வயது முடிந்தோருக்கு 20 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்குவதுபோல் தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிப்படி 70 வயது நிறைவடைந்தோருக்கும் 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story