இரும்பு தகடுகள் திருடிய 2 வாலிபர்கள் கைது
ஆம்பூர் அருகே இரும்பு தகடுகள் திருடிய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஆம்பூர்
ஆம்பூரை அடுத்த நரியம்பட்டு பகுதியில் உமராபாத் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர். அப்போது நரியம்பட்டு பாலத்தின் அருகே கட்டுமான பணிகளுக்காக வைத்திருந்த இரும்பு தகடுகளை 2 வாலிபர்கள் எடுத்துச் செல்வதை போலீசார் கண்டனர். இதைத் தொடர்ந்து அவர்களை மடக்கி பிடித்து போலீசார் விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள் பெரிய வெங்கடசமுத்திரம் பகுதியை சேர்ந்த பசுபதி (வயது 27), பிரவீன் (22) என்பதும், இரும்பு தகடுகளை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story