மஞ்சப்பையை பயன்படுத்த வேண்டும்


மஞ்சப்பையை பயன்படுத்த வேண்டும்
x
தினத்தந்தி 17 May 2022 11:51 PM IST (Updated: 17 May 2022 11:51 PM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து மஞ்சப்பையை பயன்படுத்த வேண்டும் என்று கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கிருஷ்ணகிரி:
மீண்டும் மஞ்சப்பை 
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. மண், நீர், காற்று மாசுபடுகிறது. இத்தகைய பிளாஸ்டிக் பயன்பாட்டை தடை செய்ய தமிழக அரசின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு இயக்கத்தை தொடங்கி வைத்தார். கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் மீண்டும் மஞ்சப்பை இயக்கம் என்ற விழிப்புணர்வு இயக்கம் தொடங்கப்பட்டு, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
ஒத்துழைப்பு 
பொதுமக்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருதி மஞ்சப் பையை பயன்படுத்த வேண்டும். மேலும் வணிகர்கள், கடைக்காரர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story