நாமக்கல் மாவட்டத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு-ஆராய்ச்சி நிலையம் தகவல்


நாமக்கல் மாவட்டத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு-ஆராய்ச்சி நிலையம் தகவல்
x
தினத்தந்தி 17 May 2022 11:51 PM IST (Updated: 17 May 2022 11:51 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் இன்றும், நாளையும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆராய்ச்சி நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நாமக்கல்:
மழைக்கு வாய்ப்பு
நாமக்கல் மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) முதல் 3 நாட்கள் நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
அடுத்த 3 நாட்கள் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். இன்று 12 மி.மீட்டரும், நாளை (வியாழன்) 5 மி.மீட்டர் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) மழைக்கு வாய்ப்பு இல்லை. வெப்பநிலையை பொறுத்த வரையில் அதிகபட்சமாக 91.4 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 73.4 டிகிரியாகவும் இருக்கும்.
காற்று மணிக்கு 8 கி.மீ.வேகத்தில் தென்மேற்கு திசையில் இருந்து வீசும். காற்றின் ஈரப்பதம் அதிகபட்சமாக 75 சதவீதமாகவும், குறைந்தபட்சமாக 60 சதவீதமாகவும் இருக்கும்.
அப்ளா நச்சு
சிறப்பு வானிலையை பொறுத்த வரையில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழை மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோன்ற வானிலையில் அப்ளா நச்சு, பூஞ்சை காளான் மூலம் உற்பத்தி ஆகிறது. கால்நடை தீவனங்களில் அப்ளா நச்சு இருந்தால் உற்பத்தி திறன் மட்டும் இல்லாமல், கல்லீரல் செயல்பாடு மற்றும் கருச்சிதைவு உள்ளிட்ட இனப்பெருக்க கோளாறுகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு போன்றவற்றை ஏற்படுத்தும்.
பாலில் அப்ளா நச்சு அளவை குறைக்க கால்நடை தீவன மூலப்பொருட்களில் உள்ள நச்சின் அளவை கட்டுப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story