பெண்ணை தாக்கிய 5 பேர் மீது வழக்கு
பெண்ணை தாக்கிய 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
எருமப்பட்டி:
எருமப்பட்டி அருகே உள்ள மேட்டுப்பட்டி ஊராட்சி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்தவர் விஸ்வநாதன். இவருடைய மனைவி ராஜேஸ்வரி (வயது 28). இந்த தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். விஸ்வநாதன், ராஜேஸ்வரி இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக அவர்கள் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். இந்தநிலையில் ராஜேஸ்வரி அங்குள்ள ரேஷன் கடை அருகே பேசி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பத்மா, சோபி, சுப்பிரமணி, ஷாலு, சுபஸ்ரீ ஆகிய 5 பேரும் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ராஜேஸ்வரி எருமப்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story