நாமக்கல்லில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை மறுநாள் நடக்கிறது
நாமக்கல்லில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை மறுநாள் நடக்கிறது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாமக்கல் மாவட்டத்தில் இந்த மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் எனது தலைமையில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு, கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் சமூக விலகலை கடைபிடித்தும், முககவசம் அணிந்தும், கைகளை கிருமி நாசினியால் நன்கு சுத்தம் செய்தும் கலந்து கொண்டு, தங்களது கோரிக்கைகளை தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.
Related Tags :
Next Story