கல்வி நிறுவனங்களின் வாகனங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்-ஆலோசனை கூட்டத்தில் அறிவுறுத்தல்


கல்வி நிறுவனங்களின் வாகனங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்-ஆலோசனை கூட்டத்தில் அறிவுறுத்தல்
x

கல்வி நிறுவனங்களின் வாகனங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

நாமக்கல்:
ஆலோசனை கூட்டம்
பள்ளி குழந்தைகளின் நலன்கருதி ஒவ்வொரு ஆண்டும் பள்ளி திறப்பதற்கு முன்பு கல்வி நிறுவனங்களின் வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஆய்வு விரைவில் தொடங்க உள்ளது. இதை முன்னிட்டு நாமக்கல் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கல்வி நிறுவனங்களின் போக்குவரத்து பிரிவு பணியாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
கூட்டத்திற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி கல்வி நிறுவன வாகனங்களை புதுப்பிக்க வேண்டும் என்று கூறினார்.
கண்காணிப்பு கேமரா
கூட்டத்தில் கல்வி நிறுவன வாகனங்களில் ஜி.பி.எஸ். கருவி மற்றும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும் வாகனங்களை பாதுகாப்பாக இயக்குவது குறித்து விளக்கப்பட்டது.
இதில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் உமா மகேஸ்வரி, சரவணன், நேர்முக உதவியாளர் முருகன் மற்றும் தனியார் கல்வி நிறுவன போக்குவரத்து பிரிவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Next Story