போலி பத்திரப்பதிவு செய்த 6 பேர் மீது வழக்கு


போலி பத்திரப்பதிவு செய்த 6 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 17 May 2022 11:52 PM IST (Updated: 17 May 2022 11:52 PM IST)
t-max-icont-min-icon

வேப்பனப்பள்ளி அருகே பெண்ணை ஏமாற்றி நிலத்தை போலி பத்திரப்பதிவு செய்த 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

வேப்பனப்பள்ளி :
வேப்பனப்பள்ளி அருகே உள்ள குருவரெட்டிபோடூர் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி சுஜாதா (வயது32). இவர் தடதாரை கிராமத்தை சேர்ந்த சுரேஷ் என்பவரிடம் கடந்த 2009-ம் ஆண்டு தனது சொத்தை ரூ.35 ஆயிரத்துக்கு அடமானம் வைத்து பணம் பெற்றுள்ளார். பின்னர் 1 வருடம் கழித்து பணத்தை திரும்பி செலுத்தியுள்ளார். பின்னர் சுஜாதாவை சுரேஷ் என்பவர் பத்திரத்தை ரத்து செய்வதாக கூறி பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு அழைத்து சென்று ஏமாற்றி வேறு ஒரு பெண்ணின் பெயருக்கு மாற்றி போலியாக பத்திரப்பதிவு செய்துள்ளார்.
இதை அறிந்து அதிர்ச்சியடைந்த சுஜாதா போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்தார். அதன் பேரில் வேப்பனப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது சுரேஷ் மற்றும் சிலர் போலி பத்திரம் தயாரித்து சுஜாதாவை ஏமாற்றியது தெரியவந்தது. இதையடுத்து போலி பத்திரப்பதிவு செய்த சுரேஷ் மற்றும் இவர்களுக்கு உதவிய சந்திரசேகர், கவுரிசங்கர், யஸ்வந்த், வெங்கடேஷ்கவுடு உள்பட 6 பேர் மீது போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story