தேனி :
தேனி அருகே உள்ள டி.சுப்புலாபுரம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் குணா (வயது 22). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் அவர், தேனி வீரபாண்டி கோவில் திருவிழாவிற்காக ஊருக்கு வந்திருந்தார். கடந்த 15-ந் தேதி குணா, அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர்களான சரவணகுமார், சூரிய பிரகாஷ் உடன் மோட்டார் சைக்கிளில் வீரபாண்டி கோவிலுக்கு வந்தார். பின்னர் அவர்கள் ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர். அப்போது வீரபாண்டி அருகே வயல்பட்டி என்னுமிடத்தில் அவர்களை வீரபாண்டியை சேர்ந்த தட்சிணாமூர்த்தி (20), அபினாஷ் (20), குணால் (22), விக்னேஷ் (20), ஆதீஷ் (22) ஆகியோர் தடுத்து நிறுத்தினர். திருவிழாவில் தகராறு செய்ததாக கூறி குணா கோஷ்டியை தாக்கி ெகாலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தட்சிணாமூர்த்தியை கைது செய்தனர். மற்றவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.