தேசிய நெடுஞ்சாலையில் கார்கள் கவிழ்ந்து விபத்து
ஆம்பூர் அருகேதேசிய நெடுஞ்சாலையில் கார்கள் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 6 பேர் காயமடைந்தனர்.
ஆம்பூர்
வாணியம்பாடி பகுதியை சேர்ந்தவர் ரபீக் (வயது 35). இவர் தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் ஆம்பூர் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார்.
மின்னூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது அதே திசையில் பேரணாம்பட்டு பகுதியை சேர்ந்த சாதிக் அஹமத் (21) என்பவர் வந்த காரும் இவரது காரும் திடீரென ஒன்றோடு ஒன்று உரசியதில் கட்டுப்பாட்டை இழந்த 2 கார்களும் எதிர்திசையில் ஆம்பூரில் இருந்து வாணியம்பாடி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பாய்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ரபீக் குடும்பத்தினர் மற்றும் சாதிக் அஹமத் உள்ளிட்ட 6 பேர் படுகாயமடைந்தனர். உடனடியாக அப்பகுதியினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story