வெளிநாட்டிற்கு அனுப்புவதாக கூறி ரூ.4 லட்சம் மோசடி


வெளிநாட்டிற்கு அனுப்புவதாக கூறி ரூ.4 லட்சம் மோசடி
x
தினத்தந்தி 18 May 2022 12:05 AM IST (Updated: 18 May 2022 12:05 AM IST)
t-max-icont-min-icon

பரமக்குடியில் வெளிநாட்டிற்கு அனுப்புவதாக கூறி ரூ.4½ லட்சம் மோசடி செய்யப்பட்டு உள்ளது.

பரமக்குடி,
பரமக்குடி அருகே உள்ள ஊரக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (வயது 47). இவர் குவைத் நாட்டிற்கு செல்வதற்காக கீழக்கரையை சேர்ந்த முகமது ஹனிபா என்பவரிடம் ரூ.4½ லட்சத்தை அவரது வங்கி கணக்கில் பரிவர்த்தனை செய்துள்ளார். பின்பு குவைத் நாட்டிற்கு எப்போது அனுப்பி வைப்பீர்கள் என்று கேட்டபோது முன்னுக்குப்பின் முரணான தகவலை கூறி வந்துள்ளார். பின்பு நாளடைவில் அவரது செல்போனையும் சுவிட்ச் ஆப் செய்து விட்டாராம். இதனால் அதிர்ச்சி அடைந்த தட்சிணாமூர்த்தி பார்த்திபனூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் முகமது ஹனிபா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story