சிலிண்டருக்கு மாலை அணிவித்து மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து சிலிண்டருக்கு மாலை அணிவித்து மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விறகு அடுப்பில் சமைத்து நூதன போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
திருத்துறைப்பூண்டி:
பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து சிலிண்டருக்கு மாலை அணிவித்து மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விறகு அடுப்பில் சமைத்து நூதன போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
இந்திய தேசிய மாதர் சங்கம் சார்பில் மத்திய அரசை கண்டித்தும், பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்தும் திருத்துறைப்பூண்டி தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் விறகு அடுப்பு மற்றும் கியாஸ் சிலிண்டரை வைத்து கும்மியடித்தனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய தேசிய மாதர் சங்க திருவாரூர் மாவட்ட தலைவர் தமயந்தி, தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் தமிழ்ச்செல்வி ராஜா, மாநில குழு உறுப்பினர் குருமணி, மாவட்ட குழு உறுப்பினர்கள் விஜயா, சுஜாதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாதர் சங்க ஒன்றிய தலைவர் கவிதா, ஒன்றிய பொருளாளர் ஜோதி, ஒன்றிய துணைத்தலைவர்கள் தங்கம், ஜமுனா, ஒன்றிய துணைச் செயலாளர் அபூர்வம் உள்பட பலர் கலந்து கொண்டு பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
முன்னதாக புதிய பஸ் நிலையத்தில் இருந்து பெண்கள் ஊர்வலமாக வந்து தபால் நிலையத்தை அடைந்தனர்.
கொரடாச்சேரி
கொரடாச்சேரி தபால் நிலையம் முன்பு இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை கண்டித்து கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கொரடாச்சேரி ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் கவிதா தலைமை தாங்கினார்.
இதில் மாவட்டத் தலைவர் சுலோச்சனா, ஒன்றியச் செயலாளர் கவுரி, மாவட்டக்குழு உறுப்பினர் சந்தா ஆகியோர் பேசினர். இதில் கொரடாச்சேரி பேரூராட்சிக் குழு உறுப்பினர் மரகதம், சங்க கொரடாச்சேரி ஒன்றிய தலைவர் இளையராணி உள்பட பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.
கோட்டூர்
திருவாரூர் மாவட்டம் கோட்டூரில் இந்திய மாதர் தேசிய சம்மேளனம் ஒன்றியக்குழு சார்பில் கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் உஷா தலைமை தாங்கினார். சங்க மாநிலக்குழு உறுப்பினர் அம்புஜம், ஒன்றியக்குழு தலைவர் மணிமேகலை, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் மஞ்சுளா, மாவட்டக்குழு உறுப்பினர் லிட்டின் மேரி, ஒன்றிய துணை செயலாளர் தமிழ்ச்செல்வி, ஒன்றிய துணை தலைவர் செல்வமேரி ஒன்றிய பொருளாளர் வனஜா மற்றும் பலர் கலந்து கொண்டு பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
மன்னார்குடி
மன்னார்குடி தலைமை தபால்நிலையம் எதிரில் இந்திய தேசிய மாதர் சம்மேளம் சார்பில் விறகு அடுப்பில் சமைத்தும், சிலிண்டருக்கு மாலை அணிவித்தும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு. மாதர் சங்க ஒன்றிய செயலாளர் பூபதி, ஒன்றிய தலைவர் வனிதாதேவி ஆகியோர் தலைமை தாங்கினர். கோரிக்கையினை விளக்கி மாதர் சங்க மாவட்ட துணை செயலாளர் மீனாம்பிகை, ஒன்றிய குழு துணை தலைவர் வனிதாஅருள்ராஜன், நகர தலைவர் மல்லிகா, ஒன்றிய பொருளாளர் வைஜெயந்திமாலா, ஊராட்சி மன்ற தலைவர் சாந்திராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டு பெட்ரோல், டீசல், கியாஸ் விலையை உயர்வை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
Related Tags :
Next Story