திருச்சி மாவட்ட தொழில் மைய பொது மேலாளரின் வங்கி லாக்கரில் 110 பவுன் நகை, 2½ கிலோ வெள்ளி சிக்கியது


திருச்சி மாவட்ட தொழில் மைய பொது மேலாளரின் வங்கி லாக்கரில்  110 பவுன் நகை, 2½ கிலோ வெள்ளி சிக்கியது
x
தினத்தந்தி 18 May 2022 12:16 AM IST (Updated: 18 May 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி மாவட்ட தொழில் மைய பொது மேலாளரின் வங்கி லாக்கரில் 110 பவுன் நகை, 2½ கிலோ வெள்ளி சிக்கியது

திருச்சி
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக சாலையில் ராஜாகாலனியில் மாவட்ட தொழில் மைய அலுவலகம் உள்ளது. இங்கு பல்வேறு தொழில்களுக்கு கடன் பெறுவதற்கான திட்ட அறிக்கை கொடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் புதிதாக தொழில் தொடங்கும் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு பயிற்சியளித்து, அவர்களுக்குகடன்வழங்கவங்கிகளுக்குபரிந்துரைக்கப்படுகிறது. தொழில் மையம் மூலம் பெறப்படும் வங்கி கடனுக்கு சுமார் 25 சதவீதம் வரை மானியம் கிடைக்கும்.
ரூ.3 லட்சம் பறிமுதல்
இதனால், மானிய கடன் பெறும் பயனாளிகளிடம் மாவட்ட தொழில் மைய அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாக திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு புகார்கள் வந்தன. அதன் பேரில் நேற்று முன்தினம் மாலை திருச்சி மாவட்டலஞ்சஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டன் தலைமையிலான போலீசார் மாவட்ட தொழில் மையத்தில் திடீரென நுழைந்து சோதனை மேற்கொண்டனர்.அப்போது, மாவட்ட தொழில் மையத்தின் பொது மேலாளர் ரவீந்திரனின் (வயது 52) அறையில் ரூ.3 லட்சம் இருந்தது. ஆனால் அந்த பணத்திற்கு எந்தவித ஆவணமும் இல்லை. இதுபற்றி விசாரித்த போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். இதனால் அந்த பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.
வீடுகளில் சோதனை
மேலும் பொறியாளர் கம்பன் (43) என்பவரிடமும் விசாரணை நடத்தினர். சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக சோதனை நடத்திய போலீசார், தொழில் மையத்தில் இருந்து முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். இதைத்தொடர்ந்து, பொதுமேலாளர், பொறியாளர் ஆகியோரை விசாரணைக்காக லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர். பின்னர், திருச்சி உறையூரில் உள்ள பொதுமேலாளர் வீட்டிலும், திருவெறும்பூரில் உள்ள பொறியாளர் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது,பொதுமேலாளர் வீட்டில் கணக்கில் வராத ரூ.6 லட்சம், 50 பவுன் தங்க நகைகள், ரூ.1 கோடிமதிப்புள்ள நில ஆவணங்கள் மற்றும் ரூ.40 லட்சம் மதிப்புள்ள வங்கி முதலீடு பரிவர்த்தனை ஆவணங்கள், லாக்கர் சாவிகள் சிக்கின. பொறியாளர் வீட்டில் எதுவும் சிக்கவில்லை.
வங்கி லாக்கரில் சோதனை
இதையடுத்து நகைகள், ஆவணங்கள் ஆகியவற்றை ஆவணப்படுத்தினர். ரூ.6 லட்சத்தை பறிமுதல் செய்த போலீசார், பொது மேலாளரையும், பொறியாளரையும் நேற்று முன்தினம் இரவே விடுவித்து, நாளை (நேற்று) விசாரணைக்கு நேரில் ஆஜர் ஆகும்படி கூறிஅனுப்பினர்.
அதன்படி, நேற்று மீண்டும் இருவரையும் தொழில் மையத்துக்கு வரவழைத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணை முடிந்தவுடன், ரவீந்திரனை தில்லைநகரில் உள்ள வங்கிக்கு அழைத்து சென்று அவரது லாக்கர்களில் திறந்து சோதனை செய்தனர்.
110 பவுன் நகை, 2½ கிலோ வெள்ளி சிக்கியது
அப்போது, பொது மேலாளரின் லாக்கர்களில் 110 பவுன் நகை, 2½ கிலோ வெள்ளி பொருட்கள் இருந்தன. அவற்றை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர். பின்னர், மாவட்ட தொழில்மைய மேலாளர் ரவீந்திரன், பொறியாளர் கம்பன் ஆகியோர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ்நேற்றுவழக்குப்பதிவு செய்தனர்.தொடர் விசாரணைக்கு பிறகு 2 பேரும் கைது செய்யப்படுவார்கள்என்றும்,மேலும்துறைரீதியான விசாரணை நடத்த சம்பந்தப்பட்டஉயர்அதிகாரிகளுக்கு பரிந்துரைசெய்யப்பட்டுள்ளதாகவும் லஞ்சஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story