சுரண்டை அருகே கிணற்றில் தவறி விழுந்து சிறுமி சாவு


சுரண்டை அருகே கிணற்றில் தவறி விழுந்து சிறுமி சாவு
x
தினத்தந்தி 18 May 2022 12:22 AM IST (Updated: 18 May 2022 12:22 AM IST)
t-max-icont-min-icon

சுரண்டை அருகே கிணற்றில் தவறி விழுந்து சிறுமி பரிதாபமாக இறந்தார்.

சுரண்டை:
சிறுமிகள்
தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே கரடிகுளம் கிராமம் கனகசபாபதிபேரி பகுதியைச் சேர்ந்தவர் சுடலை. இவரது மகள் சுமித்ரா (வயது 8).
இதே ஊரைச் சேர்ந்த சண்முகவேல் என்பவரது மகள் கார்த்திகா (10).
இவர்கள் இருவரும் அதே ஊரைச் சேர்ந்த ஒரு பள்ளியில் படித்து வருகின்றனர். பள்ளிக்கு விடுமுறை விட்டு விட்டதால் நேற்று மாலை கரடிகுளம் கிராமத்திற்கு அருகில் உள்ள ஒரு கிணற்றில் குளிக்க சென்றனர். கிணற்றில் தண்ணீர் அதிகமாக இருந்ததால் படிக்கட்டில் அமர்ந்து குளித்தபோது இருவரும் தவறி கிணற்றில் விழுந்ததாக கூறப்படுகிறது.
பலி
கிணற்றுக்குள் சிறுமிகள் விழுந்த சத்தத்தை கேட்டு பக்கத்து வயலில் வேலை பார்த்துக் கொண்டு இருந்தவர்கள் அங்கு ஓடி வந்தனர். கிணற்றில் விழுந்த சிறுமிகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் சுமித்ரா கிணற்றில் மூழ்கி பரிதாபமாக இறந்தாள்.  
மற்றொரு சிறுமி கார்த்திகாவை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்து காப்பாற்றினர்.
ஆழமான கிணறு
கிணற்றின் ஆழம் அதிகமாக இருந்ததால் சுமித்ரா உடலை கடையநல்லூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து சேர்ந்தமரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கடையநல்லூர் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story