வாய்க்கால்கள் தூர்வாரும் பணி


வாய்க்கால்கள் தூர்வாரும் பணி
x
தினத்தந்தி 18 May 2022 12:30 AM IST (Updated: 18 May 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் அருகே வாய்க்கால்கள் தூர்வாரும் பணியை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருவாரூர்:
திருவாரூர் அருகே வாய்க்கால்கள் தூர்வாரும் பணியை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
 கலெக்டர் ஆய்வு
திருவாரூர் ஒன்றியம் பள்ளிவாரமங்கலம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதியளிப்பு திட்டமான 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வாய்க்கால்கள் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
பள்ளிவாரமங்கலம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் சி மற்றும் டி பிரிவு வாய்க்கால்கள் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாய்க்கால்கள் தூர்வாரப்படுகிறது. 
உரிய காலத்தில் முடிக்க வேண்டும்
இந்த பணியில் 2.450 பேர் ஈடுபட்டு வருகின்றனர். பணிகளை முழுமையாக உரிய காலத்தில் முடிக்க  வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக பள்ளிவாரமங்கலம் ஊராட்சியில் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டமான ஆவாஸ் பிளஸ் திட்டத்தின் கீழ் கான்கிரீட் வீடு கட்டப்பட்டு வருவதை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது செயற்பொறியாளர் (ஊரக வளர்ச்சி) சடையப்பன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாஸ்கர், புவனேஸ்வரி, ஒன்றிய பொறியாளர் சிதம்பரம், பணி மேற்பார்வையாளர்கள் குருநாதன், தியாகராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story