சாலை மறியல்
திருச்சுழி அருகே சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
காரியாபட்டி,
திருச்சுழியில் ஒரு சமுதாய மக்கள் குடியிருந்து வரும் பகுதியில் உள்ள பொது இடத்தை ஒரு நபர் ஆக்கிரமிப்பு செய்து வருவதாக கூறி அந்த சமுதாய மக்கள் மற்றும் திருச்சுழி ஊராட்சி மன்ற தலைவர் பஞ்சவர்ணம் குமார் ஆகியோர் தலைமையில் நரிக்குடி -திருச்சுழி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த திருச்சுழி தாசில்தார் சிவக்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் காண்டீபன், சப்-இன்ஸ்பெக்டர் பால்பாண்டி மற்றும் அதிகாரிகள் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story