மளிகை பொருட்கள் ஏற்றிவந்த லாரி சாலையில் கவிழ்ந்தது
திண்டிவனம் அருகே மளிகை பொருட்கள் ஏற்றிவந்த லாரி சாலையில் கவிழ்ந்தது விபத்துக்குள்ளானது.
திண்டிவனம்,
சென்னையில் இருந்து நேற்று மதியம் மளிகை பொருட்கள் பாரம் ஏற்றிய லாரி திண்டிவனம் நோக்கி புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. அந்த லாரியை விக்கிரவாண்டி அடுத்த பள்ளியந்தூர் பகுதியை சேர்ந்த சக்திவேல் மகன் முருகன் என்பவர் ஓட்டனார்.
திண்டிவனம் அடுத்த சாரம் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, அந்த வழியாக சென்ற கார் மீது மோதி சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் கார் லேசாக சேதமடைந்தது. காரில் வந்தவர்கள் காயமின்றி தப்பினர். இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்ததும் ஒலக்கூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, நீண்டவரிசையில் நின்ற வாகனங்களை லேபை சாலை வழியாக செல்ல நடவடிக்கை எடுத்தனர். மேலும் விபத்துக்குள்ளான லாரியும் அப்புறப்படுத்தப்பட்டது.
Related Tags :
Next Story