சிவகாசி பட்டாசு ஆலைகளில் சி.பி.ஐ. அதிகாரிகள் திடீர் ஆய்வு?


சிவகாசி பட்டாசு ஆலைகளில் சி.பி.ஐ. அதிகாரிகள் திடீர் ஆய்வு?
x
தினத்தந்தி 18 May 2022 12:40 AM IST (Updated: 18 May 2022 12:40 AM IST)
t-max-icont-min-icon

சரவெடி தயாரிக்கப்படுகிறதா என சிவகாசி பட்டாசு ஆலைகளில் சி.பி.ஐ. அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

சிவகாசி, 
இந்தியாவில் பட்டாசு உற்பத்தி செய்யவும், வெடிக்கவும் தடை கேட்டு சிலர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணையின் போது சுப்ரீம் கோர்ட்டு பட்டாசு உற்பத்தியில் பேரியம் நைட்ரேட் என்ற வேதிப்பொருளை பயன்படுத்தக்கூடாது என்றும், சரவெடிகள் தயாரிக்க கூடாது என்றும் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து இந்த விதிகளை யாராவது மீறுகிறார்களா என சிவகாசியில் உள்ள வெடிப்பொருள் கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் அவ்வப்போது பட்டாசு ஆலைகளில் திடீர் ஆய்வு செய்து சுப்ரீம் கோர்ட்டுக்கு அறிக்கை சமர்ப்பித்து வந்தனர்.
இந்தநிலையில் நேற்று காலை சிவகாசிக்கு வந்த சி.பி.ஐ. அதிகாரிகள் வெம்பக்கோட்டையில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் திடீர் ஆய்வு செய்து அங்கு தயாரிக்கப்பட்ட பட்டாசுகளில் சில மாதிரிகளை சேகரித்து சென்றதாக கூறப்படுகிறது. மேலும் சி.பி.ஐ. அதிகாரிகள் சிவகாசி பகுதியில் 2 நாட்கள் தங்கி இருந்து ரகசியமாக தங்களது ஆய்வுகளை மேற்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. சி.பி.ஐ. அதிகாரிகளின் இந்த திடீர் ஆய்வு பட்டாசு ஆலை அதிபர்கள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து பட்டாசு ஆலை அதிபர் ஒருவர் கூறியதாவது, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி சி.பி.ஐ. அதிகாரிகள் ஏற்கனவே சிவகாசியில் உள்ள சில பட்டாசு ஆலைகளில் திடீர் ஆய்வு செய்து அதன் அறிக்கைகளை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளனர். 
அதேபோல் தான் தற்போதும் திடீர் ஆய்வு செய்து இருக்கிறார்கள். இவர்கள் இங்குள்ள ஆலைகளில் தடை செய்யப்பட்ட வேதிப்பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா? சரவெடிகள் தயாரிக்கப்படுகிறதா? என்பது குறித்து விசாரித்துள்ளனர். சிவகாசியில் உள்ள பட்டாசு ஆலைகளில் தடை செய்யப்பட்ட வேதிப்பொருட்கள் பயன்படுத்துவது இல்லை. அதேபோல் சரவெடிகளும் தயாரிப்பது இல்லை என்றார்.


Next Story