வெவ்வேறு சம்பவங்களில் பெண் என்ஜினீயர் உள்பட 4 பேர் தற்கொலை


வெவ்வேறு சம்பவங்களில் பெண் என்ஜினீயர் உள்பட 4 பேர் தற்கொலை
x
தினத்தந்தி 18 May 2022 12:41 AM IST (Updated: 18 May 2022 12:41 AM IST)
t-max-icont-min-icon

வெவ்வேறு சம்பவங்களில் பெண் என்ஜினீயர் உள்பட 4 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

சமயபுரம், மே.18-
வெவ்வேறு சம்பவங்களில் பெண் என்ஜினீயர் உள்பட 4 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
பெண் என்ஜினீயர்
சோமரசம்பேட்டை அருகே உள்ள நாச்சிகுறிச்சியைச் சேர்ந்தவர் கணேசமூர்த்தி. இவரது மகன் பால்ராஜ் (வயது 31). இவருக்கும்  துறையூரைசேர்ந்தபழனியாண்டி என்பவர் மகள் என்ஜினீயரிங் பட்டதாரி சரண்யா (26) என்பவருக்கும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன் திருமணம் நடைபெற்றது.  இவர்கள் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள அன்னபூரணி நகரில் வசித்து வந்தனர். பால்ராஜ் திருச்சியில் உள்ள ஒரு வங்கியில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் கணவன்-மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டது. இந்நிலையில், நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சரண்யா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக ஆ.டி.ஓ. விசாரணையும் நடந்த வருகிறது.
தீக்குளித்து சாவு
திருச்சி சோமரசம்பேட்டை அருகே கிரிக்கல்மேடு பகுதியை சேர்ந்தவர் மணி (43). புற்றுநோய் பாதிப்புக்கு சிகிச்சை பெற்றுவந்தஇவர்சம்பவத்தன்றுமண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் சோமரசம் பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விஷம் குடித்து தற்கொலை
விஷம் குடித்து மயங்கி விழுந்த லால்குடி முஸ்லிம் தெருவை சேர்ந்த தாஜுதீன் (39) சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்தநிலையில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் லால்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் எதற்காக தற்கொலை செய்துகொண்டார் என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வாலிபர் தற்கொலை
வையம்பட்டியை அடுத்த கருங்குளம் முத்துகடை பகுதியைச் சேர்ந்தவர் ரூபன் ரஞ்சித் (23). காதல் திருமணம் செய்த இவர் குடும்ப பிரச்சினையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வையம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலையா?
மணப்பாறை வானகார தெருவைச் சேர்ந்தவர் பிரசாத் (32). நேற்று முன்தினம் இரவில் வழக்கம்போல் தூங்க சென்ற இவர் நேற்று காலையில் நீண்டநேரம் ஆகியும் எழவில்லை. 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்து, அவர்கள் வந்து பார்த்ததில் அவர் இறந்தது தெரியவந்தது. மேலும் வீட்டில் விஷ பாட்டில் இருந்தது. இது தொடர்பாக மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஒரு கடிதமும் கைப்பற்றப்பட்டது.

Next Story