கூடுதல் கட்டிடம், அடிப்படை வசதிகள்


கூடுதல் கட்டிடம், அடிப்படை வசதிகள்
x
தினத்தந்தி 18 May 2022 12:43 AM IST (Updated: 18 May 2022 12:43 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் பூந்தோட்டம் நகராட்சி பள்ளிக்கு கூடுதல் கட்டிடம், அடிப்படை வசதிகள் வேண்டி மேலாண்மைக்குழுவினர் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர்.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகனிடம், பூந்தோட்டம் நகராட்சி தொடக்கப்பள்ளி மேலாண்மைக்குழுவினர் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

விழுப்புரம் பூந்தோட்டம் நகராட்சி தொடக்கப்பள்ளியில் 553 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். 2019-20-ம் ஆண்டு மாணவ- மாணவிகள் சேர்க்கை 226 ஆக இருந்த நிலையில் தற்போது 2021-22-ம் ஆண்டு இரு மடங்காக உயர்ந்துள்ளது. இதனால் இப்பள்ளியில் 5 வகுப்பறை மட்டுமே உள்ள நிலையில் ஒரே வகுப்பறையில் சுமார் 110 மாணவ- மாணவிகள் படிக்கும் அவலநிலை உள்ளது. மேலும் இப்பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறையும் உள்ளது. இப்பள்ளியில் அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, கழிவறை வசதி, கட்டிட வசதி இப்படி எந்தவொரு வசதியும் இல்லாமல் மாணவ- மாணவிகள் பெரும் துயரத்திற்கு ஆளாகின்றனர். 

எனவே மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பூந்தோட்டம் நகராட்சி தொடக்கப்பள்ளி கட்டிடத்தை விரிவாக்கம் செய்தும், ஆசிரியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் மாவட்ட கலெக்டர், ஆவன செய்யுமாறு பள்ளி மேலாண்மைக்குழுவின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர். மனுவை பெற்ற கலெக்டர், இதுகுறித்து பரிசீலனை செய்வதாக கூறினார்.

Next Story